இன்று மாலை வெளியாகிறது ‘விஜய் 69’ பட அப்டேட்..!
‘ கோட்’ படத்தினைத் தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் நடிகர் விஜய். இதனை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.
இந்தப் படத்தின் அப்டேட் செப்.13 மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
’விஜய் 69’ படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் சிம்ரன் மீண்டும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இதில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முடிவாகிவிட்டது. இதன் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், எடிட்டராக பிரதீப்.இ.ராகவ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. முழுநேர அரசியலுக்குள் நுழையும் முன் விஜய் நடிக்கவுள்ள கடைசி படம் இது என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
தளபதி 69 படத்தின் அப்டேட் வந்ததை நினைத்து ரசிகர்கள் சந்தோஷப்படுவதா? அல்லது இதுதான் தளபதி விஜய்யின் கடைசி படம் என வருத்தப்படுவதா என ரொம்பவே மனக்கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர். கோட் படத்தை விட தளபதி 69 படத்தை வேறலெவலில் கொண்டாட வேண்டும் என்றும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என விஜய் ரசிகர்கள் இப்பவே முடிவு செய்துள்ளனர். ஒன் லாஸ்ட் டைம் என கேவிஎன் தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டு விஜய் ரசிகர்களை கதற விட்டுள்ளது.
இத்தனை வருடங்களாக தியேட்டர் செலிபிரேஷன் விஜய் படங்களுக்கு எப்படி இருந்தது என்பதை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கண்ணீர் மல்க ஃபீல் பண்ண வைத்து விட்டு இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என கேவிஎன் அறிவித்துள்ளனர்.