1. Home
  2. தமிழ்நாடு

விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!

1

கடந்த 2023 ஆம் ஆண்டு விடுதலை முதல் பாகம் திரையரங்கில் வெளியானது. சூரி இப்படத்தில் நாயனாக அறிமுகமானார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஓராண்டு காலம் கடந்துள்ளது.

முதல் பாகத்தில் சூரி படம் முழுக்க இடம்பெற்றிருந்த நிலையில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் அவ்வளவாக இடம்பெறவில்லை. தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு  மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்துள்ளார். 1960 களில் நடக்கும் கதைக்கள் என்பதால் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியரின் தோற்றத்தை டீஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காட்சிபடுத்தி வருகிறார்கள்.

இவர்கள் தவிர்த்து இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காணவும் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like