1. Home
  2. தமிழ்நாடு

2000 ரூபாய்க்கு கர்ப்பிணி பெண்களை டாக்டர்கள் செக் செய்யும் வீடியோக்கள் விற்றது அம்பலம்..!

1

குஜராத்தில் ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது..அந்த பகுதிகளில் மிகவும் பிரபலமான மருத்துவமனையாகும். இந்நிலையில், இந்த மருத்துவமனையின் அறைகளில், கர்ப்பிணிகள் பரிசோதனை செய்யப்படும் பல வீடியோக்கள் யூடியூப் மற்றும் டெலிகிராம் சேனல்களில் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.. அதிலுள்ள ஒவ்வொரு வீடியோவை கண்டும், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெலிகிராம், யூடியூப் என சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், தற்போது இது தொடர்பாக அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்..


மருத்துவமனையின் இயக்குநரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் எப்படி வெளியானது என்று தனக்கு தெரியவில்லை .. சிசிடிவி சர்வர் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஆனாலும், இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை.. இதுகுறித்து புகார் தரப்போகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.


ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசார், இதுகுறித்த விசாரணையை உடனடியாக துவங்கியிருக்கிறார்கள்.. அத்துடன், வழக்குப் பதிவு செய்து, மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்களையும் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில், மருத்துவமனையின் உள்ளே ஒரு படுக்கையில், மருத்துவர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் 7 வீடியோக்களை யூடியூப் சேனல் இதுவரை அப்லோடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளில் இருந்து இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது..


அந்த சேனலை விளம்பரப்படுத்தும் டெலிகிராம் குழுவில் 90க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதற்கு, டெலிகிராம் குழுவின் உறுப்பினர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.. சந்தாக்களை செலுத்த வேண்டும் என்பதற்காக, உறுப்பினர்களை ஈர்க்கவே, இதே போன்ற வீடியோக்களின் ஸ்கிரீன் கிராப்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளன..


கடந்த வருடம் செப்டம்பரில் இந்த டெலிகிராம் குழு தொடங்கப்பட்டுள்ளது..  ராஜ்கோட்டில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ அறையில் இருந்து இந்த வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ள.. இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.


இது தொடர்பாக மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பல்வேறு youtube சேனல்கள் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலமாக வக்கிர ஆர்வம் உள்ள நபர்களுக்கு பணம் செலுத்துதல் மூலம் ஒரு வீடியோவிற்கு 2000 ரூபாய் வரை விட்டதாக தெரியவந்துள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ருமேனியா மற்றும் அட்லாண்டாவில் அமெரிக்கா வெளிநாட்டு சேக்கர்களுடன் தொடர்பில் இருந்தனர் அவர்கள் ராஜ்கோட்டில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை சிசிடிவி  ஹேக் செய்து telegram மற்றும் youtube சேனல்களை பயன்படுத்தி வீடியோக்களை பதிவேற்றினார். 

கைது செய்யப்பட்டவர்களில் லத்துரை சேர்ந்த பிரஜ்வால் அசோக் டைலி வயது 24 என்பவர் தான் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்திருக்கிறார். அவர் ஒரு youtube சேனலை நடத்தி டெலிகிராம் குழுவை நிர்வாகித்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவருடைய கூட்டாளியான சாங் லி பகுதியைச் சேர்ந்த புரட்சி ராஜேந்திர ஜாதவ் 29 குழு பதிவு மற்றும் வங்கி கணக்குகளை கையாண்டிருக்கிறார் மற்றொரு கூட்டாளி சந்திரபிரகாஷ் புல் சந்த் 32 மற்றொரு youtube சேனலில் நடித்து வந்ததாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

பிப்ரவரி 17 என்று மகப்பேறு மருத்துவமனையில் பெண் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதை காட்டும் வீடியோக்கள் அந்த யூட்யூபில் பதிவேற்றப்பட்ட போது இந்த சம்பவம் அம்பலமானது. சைபர் குற்ற பிரிவின் சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவுகள்( 66 இ) தனியுரிமை மீறல் மற்றும் 67 (ஆபாசமான உள்ளடக்க வெளியீடு) ஆகியவற்றினில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு தீவிர புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like