தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி ஆபாச வார்த்தை பேசும் வீடியோ வைரல்..!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 சட்டசபை தேர்தலில் களம் காண இருக்கிறது. தவெக தலைவர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்பட்டு வருகிறது. மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து நியமன ஆணையுடன், வெள்ளி நாணயம் வழங்கி விஜய் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளராக லெஃப்ட் பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். லெஃப்ட் பாண்டி ஏற்கனவே தேனி மாவட்ட தவெக தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது, தேனி தெற்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி, மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அச்சில் ஏற்ற முடியாத தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார் லெஃப்ட் பாண்டி.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி சத்யா நந்தகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கட்சிக்குள் தன்னை ஓரம்கட்ட தவெக தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி மற்றும், வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். தன் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கிறது என்று தவறான தகவல்களை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்துக்கு தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தவெக செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்த வீடியோவில் கூறியுள்ளார். மேலும், தன்னை கட்சிப் பணி செய்யவிடாமலும், தனக்கு அங்கீகாரம் கிடைக்க விடாமலும் முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஜய் மக்கள் இயக்கத்தில் ஆரம்பித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழகம் வரை என கடந்த 7 ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வருகிறேன். ஆனால், தற்போது தவெக தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என் மீது தவறான தகவல்களை தலைமைக்கு தெரிவித்து தன்னுடைய மக்கள் பணியை முடக்கியுள்ளனர். குறிப்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது எனக் காரணம் காட்டி தனக்குரிய அங்கீகாரம் கிடைக்க விடாமல் செய்கின்றனர்." எனத் தெரிவித்துள்ளார்.
தேனி விஜய் ரசிகை தன்னை Left பாண்டி டீம் ஒதுக்கியதாக வீடியோ வெளியிட்ட நிலையில் Left பாண்டி ஆவேசமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரல்..
— Spicy Chilli (@SpicyChilli4U) February 3, 2025
தேவி*யா என பெண்ணை கடுமையாக விமர்சித்துள்ள இந்த Left பாண்டிக்கு தாவெகவில் முக்கிய பதவியை விஜய் வழங்கியுள்ளார்.#Vijay #tvk pic.twitter.com/BzbuCqjeIR