சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோ..!

போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி கடந்த 5-ம் தேதி புறப்பட்டு சென்றது.
25 மணி நேர பயணத்திற்கு பிறகு நேற்று முன்தினம் அவர்கள் விண்வெளி நிலயத்தை சென்றடைந்தனர். சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.
இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோவை போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தனது சாகாக்களுடன் சுனிதா குதூகலமாக காற்றில் தவழ்ந்தபடி நடனமாடுவது பதிவாகியுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாகள் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரின் 3-வது பயணம் ஆகும்.
अंतरिक्ष में कदम रखते ही झूम उठीं भारतीय मूल की सुनीता विलियम्स
— suman (@suman_pakad) June 8, 2024
नासा के बोइंग स्टारलाइनर कैप्सूल ने सफलता पूर्वक अंतरिक्ष का सफर तय कर लिया
विलियम्स इस परीक्षण उड़ान के लिए पायलट हैं #SunitaWilliams #NASA #BigBreaking#BoeingStarliner pic.twitter.com/ov95qQYd0o