இணையத்தில் வீடியோ வைரல் : மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ..!
உலக அளவில் இன்றும் பேசப்படுவது மோனாலிசா ஓவியம். இந்த ஓவியம் 16-ம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி எனவரால் பொப்லார் பலகையில் வரையப்பட்டதாக கூறப்படுகிறது. மோனாலிசா ஓவியத்திற்கு லா ஜியோகொண்டா ஓவியம் என்ற பெயரும் சொல்லப்படுகிறது. இது ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். உலக அளவில் புகழ்பெற்ற ஓவியங்களில் மோனாலிசா ஓவியமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவியம் லூவர் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படம் என்றும், கி.பி. 1503 முதல் 1506 வரையிலாக காலக்கட்டத்துக்குள் இந்த ஓவியம் வரையப்பட்டு இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
இந்த நிலையில், மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைக்ரோசாப்டின் புதிய AI செயலியான VASA-1 தான் இதற்குக் காரணம். இந்த AI புகைப்படங்களை அசைவுடன் கூடிய அனிமேஷனாக மாற்றும். முதலில் மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியயோ ஏழு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.
Microsoft drops AI bot that makes Mona Lisa RAP
— Daily Mail Online (@MailOnline) April 19, 2024
🎥 Microsoft#ai #tech #monalisa #microsoft pic.twitter.com/URTj1o5xuz