வீடியோ எடிட் செய்து எம்.பி. கதிர் ஆனந்த் குறித்து தவறாக பரப்புகின்றனர் : உண்மை நிலவரம் இதோ..!
வரும் நாடாளுமனற தேர்தலில், தமிழகத்தில் மீண்டும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என கடுமையாக உழைத்து வருகின்றனர். ஒரு புறம் அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள், மறுபுறம் தலைவர்கள் பிரச்சாரம் என படு பிஸியாக தங்கள் தொங்குதியில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
இதில் பல தொகுதிகளில் சுவாரசிய சம்பவம் நடந்து வருகிறது..... குறிப்பாக. வேலூர் தொகுதியில் மீண்டும் அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கும் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மீண்டும் களத்தில் இறங்கி உள்ளனர்.
ஒரு எம்.பியாக என் தொகுதியில், தான் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து தந்து உள்ளேன் என கதிர் ஆனந்த் பிரச்சாரத்தின் போது பேசிய வீடியோ வைரலானது.
கே.வி.குப்பம் பகுதியில் கூடியிருந்த பெண்கள் மத்தியில் கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ‘‘எல்லோரும் ‘பளபள’னு மின்னுறீங்களே. என்ன சமாச்சாரம். ‘ஃபேர் அண்ட் லவ்லி’ போட்டு வந்துட்டீங்களா. என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா" என்று கேட்டார். அதாவது, முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத்தொகையில் தான், பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியது சர்ச்சைக்குரியதாக மாறியது.
1000 ரூபாய் பணத்தில் தான் நமது தாய்மார்கள் பவுடர் பூசினார்களா ? இதற்குமுன் அவர்கள் பவுடர் கூட வாங்க முடியாமல் இருந்தார்களா ? என்று இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் கதிர் ஆனந்த் அவ்வாறு பேசினாரா என அந்த வீடியோவை நாங்கள் பார்த்தோம். அதில் அவர் பேசியது, நல்ல இருக்கீங்களா ? பார்த்தாஎல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என கேட்டார். பெண்கள் மற்றும் தாய்மார்கள் அவரை பார்த்து, "தளபதி கொடுத்த ரூ.1000 காரணமாக மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்" என கூறினார்கள்.
தளபதி ஆட்சியில எல்லோரும் சந்தோசமா இருக்கீங்க... பார்க்கவே சந்தோஷமா இருக்கு என பேசினார். இதன் மூலம் கதிர் ஆனந்த் உரிமைத் தொகை 1000 ரூபாய் குறித்து பேசவில்லை என்றும் தாய்மார்கள் தான் 1000 ரூபாய் பற்றி பேசியுள்ளனர் என தெளிவாக தெரிகிறது. அந்த வீடியோவில் தவறாக எடிட் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது