1. Home
  2. தமிழ்நாடு

விக்கி செம ஹாப்பி! நள்ளிரவில் நச்சுனு ஒரு கிஃப்ட் கொடுத்த நயன்தாரா..!

Q

லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரெளடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி கடந்த 2022-ம் ஆண்டுத் திருமணம் செய்துகொண்டது. இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகினர். அவர்கள் இருவரும் வாடகைத் தாய் மூலம் அக்குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் எனப் பெயரிட்டுள்ளனர். குழந்தை பிறந்தபின்னர் சில மாதங்கள் மட்டும் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்டிருந்த நயன்தாரா, பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியானார்.
அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தன்னுடைய 6-வது படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனியெனப் பெயரிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அப்படத்தில் லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாகக் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை நயன்தாரா தான் தயாரித்து உள்ளார்.
மறுபுறம் நடிகை நயன்தாராவும் பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, யோகிபாபு உடன் மண்ணாங்கட்டி போன்ற படங்களைக் கைவசம் வைத்துள்ள நயன்தாரா, மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதுதவிர கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் என்கிற பான் இந்தியா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்.
அண்மையில் துபாயில் நடைபெற்ற சைமா விருது நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் விருது வென்றனர். இதில் அன்னப்பூரணி படத்துக்காகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்றிருந்தார் நயன்தாரா. அதேபோல் ஜெயிலர் படத்தில் ரத்தமாரே பாடலை எழுதிய விக்னேஷ் சிவனுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டது.
விருது வென்ற கையோடு துபாயில் முகாமிட்டிருந்த நயன்தாரா அங்குத் தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். நள்ளிரவில் கேண்டில் லைட் டின்னரோடு விக்னேஷ் சிவனுக்கு முத்தத்தைப் பரிசாகக் கொடுத்துத் தன் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா.
விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நயன்தாரா, பிறந்தநாள் வாழ்த்துக்கள், என்னுடைய காதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். என்னுடைய உயிர், உலகம் நீதானெனப் பதிவிட்டுள்ளார்.
Q

Trending News

Latest News

You May Like