1. Home
  2. தமிழ்நாடு

நாளை சென்னை வருகிறார் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்..!

Q

மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் தேசிய மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனம் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உள்ளது. இங்கு காது கேளாதோர் - பார்வையற்றோரின் 3-வது தேசிய மாநாடு நாளை (ஜன.31) நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் முதன்மை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக சென்னை வரும் தன்கர், மாநாட்டை முடித்துக் கொண்டு நாளையே டெல்லி திரும்புகிறார். குடியரசு துணைத் தலைவரின் வருகை காரணமாக, சென்னை விமான நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like