1. Home
  2. தமிழ்நாடு

பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி 15ம் தேதி ஆர்ப்பாட்டம்: வி.எச்.பி., அறிவிப்பு..!

1

வி.எச்.பி., மாநிலத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அறிக்கை:


தி.மு.க., அமைச்சர் பொன்முடி, ஹிந்து மத சின்னங்களை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாகப் பேசி உள்ளார். இதை எந்த நாகரிக சமூகமும் பொறுத்துக் கொள்ளாது.


முதல்வர் ஸ்டாலின், இதை தீவிரமாக கவனத்தில் வைத்து, அவர் போதிக்கும் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த வேண்டும். பொன்முடியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். இந்தப் பேச்சுக்கு பின், அவர் ஒரு வினாடி கூட அமைச்சராக தொடரக் கூடாது. அவரை தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்குவது, வெறும் கண் துடைப்பாகவே இருக்கும்.


எனவே, தமிழக அமைச்சர் பதவியிலிருந்தும், தி.மு.க., உறுப்பினர் பதவியிலிருந்தும் பொன்முடியை நீக்க வேண்டும். தன் பேச்சுக்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 15ம் தேதி, வி.எச்.பி., சார்பில், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்.


இப்பிரச்னையை நாடு முழுதும் எடுத்துச் சென்று, தி.மு.க.,வின் போலி மதச்சார்பின்மையை, அம்பலப்படுத்துவோம். ஹிந்துக்களை, தி.மு.க., அரசு தொடர்ந்து அவமானப்படுத்துவதை வெளிப்படுத்துவோம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Trending News

Latest News

You May Like