வி.ஜி.பி.யில் ராட்சத ராட்டினத்தில் கோளாறு: 30க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தவிப்பு..!

வி.ஜி.பி.,தனியார் பொழுதுபோக்கு பூங்காவின் ராட்சத ராட்டினத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் 30க்கும் மேற்பட்ட மக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக அந்தரத்தில் தவித்து வருகின்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ராட்டினத்தில் தவித்து வரும் 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக வி.ஜி.பி., நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது:
ராட்சத ராட்டினத்தை இயக்கியபோது மோட்டாரில் திடீரென சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட உடனே ராட்டினத்தை இயக்குவது நிறுத்தப்பட்டது.
உடனே ராட்டினத்தில் சிக்கியிருந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்க, எங்களிடம் இருந்த கிரேன் மூலம் முயற்சித்தோம். கிரேன் உயரம் குறைவாக இருந்ததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தோம். அவர்கள் வந்து உடன் மீட்பு பணிகள் நடைபெறகிறது. விரைவில் அனைவரும் மீட்கப்படுவர்.
இவ்வாறு வி.ஜி.பி., நிர்வாகம் தரப்பில் கூறினர்.