பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் காலமானார்..!
கடந்த ஆறு மாத காலமாக ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்யா அமுதமொழி இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் காலமாகி இருக்கிறார்.
ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சௌந்தர்யாவிற்கு அவரது சிகிச்சைக்காக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்ட நிலையில் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் சார்பில் 5.51 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் 50 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
ஆனாலும் நீண்ட காலமாக சிகிச்சையில் இருந்த சௌந்தர்யா இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். தன்னுடைய தெளிவான உச்சரிப்பு மற்றும் தோற்றம் ஆகியவற்றால் தனித்துவம் பெற்றிருந்த சௌந்தர்யாவின் மறைவு அவருடைய ரசிகர்களை பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.