பழம்பெரும் தமிழ் சினிமா பிரபலம் காலமானார்..!
இளையராஜாவுடன் வயலினிஸ்டாக இருந்த ராமசுப்பு என்ற ராமசுப்ரமணியன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.
சென்னை அடையார் இசைக் கல்லூரியில் வயிலினில் சங்கீத வித்வான் கோர்ஸ் முடித்து விட்டு அறுபதுகளில் ஹெச்.எம்.வி.,யில் இணைந்தார்.
தன்னுடைய முப்பதாவது வயதிலிருந்து சினிமாவில் பணிபுரியத் தொடங்கிய ராமசுப்பு, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலருடனும் பணிபுரிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். 'அன்னக்கிளி'யிலிருந்து மகாநதி, மௌனராகம், புன்னைகை மன்னன், அலைகள் ஓய்வதில்லை முதலான பல ஹிட் படங்களில் இவர் இளையராஜாவுடன் இணைந்து பணி புரிந்திருக்கிறார்.
ராமசுப்பு குடியரசுத் தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ் ரெட்டி, தமிழ்நாடு முதலைமச்சராக இருந்த ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து துறையில் சாதித்ததற்கான விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.
இவரது மறைவிற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.