1. Home
  2. தமிழ்நாடு

மூத்த அரசியல் தலைவர் டின் ஓ காலமானார்..!

1

மியான்மரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் இணை நிறுவனர் டின் ஓ பலவீனம் உள்ளிட்ட உடல் நல பிரச்னைகள் காரணமாக கடந்த 29-ம் தேதி யாங்கோன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் காலமானார். அவருக்கு வயது 97. 

முன்னாள் ராணுவ தளபதியான டின் ஓ, ராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சி தோல்வி அடைந்த பிறகு, 1988-ல் ஆங் சான் சூகியுடன் இணைந்து மியான்மரின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியை தொடங்கினார். கட்சியின் துணைத் தலைவராக இருந்தார். 

ஆங் சாங் சூகி போலவே டின் ஓவும் 2010 பொதுத் தேர்தலுக்கு முன்பாக விடுவிக்கப்படுவதற்கு முன், 21 ஆண்டுகளில் 14 ஆண்டுகள் சிறையிலும், வீட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். 2020-ல் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதும், ஆங் சாங் சூயை போல டின் ஓ கைது செய்யப்படவில்லை. யாங்கூனில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார்.

Trending News

Latest News

You May Like