மூத்த நாடகக் கலைஞர் சுப்புராயன் காலமானார்..!

மூத்த நாடகக் கலைஞர் சுப்புராயன் காலமானார்..!

மூத்த நாடகக் கலைஞர் சுப்புராயன் காலமானார்..!
X

புதுச்சேரி விடுதலைக்காக நாடகம் மூலம் குரல் கொடுத்த மூத்த நாடகக் கலைஞர் சுப்புராயன் காலமானார். அவருக்கு வயது 91.

காரைக்கால் மாவட்டத்தின் மூத்த நாடக கலைஞர் சுப்புராயன். இவர், புதுச்சேரி விடுதலைக்காக நாடகம் மூலம் குரல் கொடுத்தவர். பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெறுவதற்கு தனது மேடை நாடகங்கள் மூலமாக எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் சுப்புராயன்.

சாணக்கியன் என்ற நாடகத்தில் மிரட்டும் வசனங்கள் பேசி மக்கள் மத்தியில் விடுதலை வேட்கையை ஏற்படுத்தியவர் என்பதால் அவர் சாணக்கியன் சுப்புராயன் என்று அழைக்கப்பட்டார்.

200க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்களை இவர் உருவாக்கி உள்ளார். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நாடகக் கலைஞர் சுப்புராயன் நேற்று காலமானார். அவரின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
Share it