பழம்பெரும் திரைப்பட இயக்குனர் காலமானார்..!
பழம்பெரும் மூத்த திரைப்பட இயக்குனர் தான் ஷியாம் பெனகல் காலமானார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று மாலை உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்தார் பேகம், ஜூபைதர் மற்றும் மந்தன் உள்ளிட்ட நிறைய வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் தான் ஷியாம் பெனகல்.
தற்போது அவருக்கு 90 வயதாகின்ற நிலையில் சிறுநீரக நோய்களால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த ஷ்யாம் பனகல் இன்று மாலை உயிரிழந்து இருக்கிறார். இதனை அவரின் குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அவர் தன்னுடைய 90 வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கலைப்பணிக்கு சிறப்புூட்டும் விதமாக பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் மத்திய அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.