1. Home
  2. தமிழ்நாடு

பழம் பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்..!

Q

வில்லனாக அறிமுகமாகி நாயகனாக உயரும் நடிகர்களைப் போல, ஒரு நடன கலைஞராக அறிமுகமாகி, அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து கதாநாயகியாக உயர்ந்தவர் சிஐடி சகுந்தலா. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெய்சங்கர் போன்ற முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி கணேசனுடன் நடித்த தில்லானா மோகனாம்பாள், பாரதவிலாஸ், வசந்த மாளிகை உள்ளிட்ட பல படங்கள் காலத்தால் அழியாதவை.

அது மட்டுமல்லாமல் படிக்காத மேதை, திருடன், தவப் புதல்வன், ராஜராஜ சோழன், என் அண்ணன், இதயவீணை உள்ளிட்ட பல படங்களை நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் சிஐடி சகுந்தலா.

தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு உடல் நலக் குறைவால் பெங்களூரு சென்ற அவர் தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று ( செப்டம்பர் 17ஆம் தேதி) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பழம் பெரும் நடிகையான சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like