1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை..!

1

நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கு எழும்பூர் நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயப்பிரதா.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தெலுங்கு தேச கட்சியில் 1994 ஆம் ஆண்டு இணைந்தார்.  அக்கட்சியிலிருந்து விலகி சந்திரபாபு நாயுடு அணியுடன் அரசியல் பயணத்தை தொடங்கிய இவர்,  சந்திரபாபு நாயுடுடன்  ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக,  பின்னர் அங்கிருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ராம்கூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.

tn

இந்த சூழலில் சென்னையை சேர்ந்த ராம்குமார்,  ராஜ்பாபு ஆகியோருடன் சேர்ந்து அண்ணா சாலையில் திரையரங்கம் நடத்தி வந்த இவர் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட இஎஸ்ஐ தொகை தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக எழும்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் ஜெயப்பிரதா தரப்பில், தொழிலாளர்களிடம் பெற்ற தொகையைச் செலுத்திவிடுவதாகத் தெரிவித்தார். இதற்கு, தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட மூவருக்கும் 6  மாதம் சிறை தண்டனை  யுடன்,  ரூ.5,000 அபராதமும்  விதித்துள்ளது..

Trending News

Latest News

You May Like