பிரபல நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் பாலையா காலமானார்..!

பிரபல நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் பாலையா. இவரது இயற்பெயர் ரகு பாலையா. கரகாட்டக்காரன், கோபுரவாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, அமராவதி, இரட்டை ரோஜா, பவித்ரா, அவதாரம், மாயாபஜார், புது நிலவு, கும்கி, ஜெயம், வின்னர், ஸ்ரீரங்கம், தனி ஒருவன், புலி, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் பாலையா.
இந்த நிலையில், பாலையாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று (நவ.02) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.