பிரபல நடிகர் திடீர் மரணம்...!
மலையாள திரைப்பட நடிகர் நிர்மல் பென்னி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 2012ல் 'நவகதருக்கு ஸ்வாகதம்' படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன்பின் ஆமென், தூரம் உள்ளிட்ட ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ‘ஆமென்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நிர்மல். அவர் ஒரு கொச்சச்சன் (இளைய பாதிரியார்) பாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் நிர்மல் பென்னி மாரடைப்பால் காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார் என்று அவரது மரணச் செய்தியை தயாரிப்பாளர் சஞ்சய் படியூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த சஞ்சய் படியூர், அதில், 'என் இனிய நண்பருக்கு... எனது 'தூரம்' படத்தில் அவர் நடித்த ஆமென் என்ற கொச்சச்சன் பாத்திரமும் அவர் நடித்த மையக் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே இன்றும் போற்றப்படுகிறது. மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை நிர்மல் மரணமடைந்தார். எனது அன்பு நண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.