1. Home
  2. தமிழ்நாடு

’JAI HO’ படத்தில் நடித்த பிரபல நடிகர் முகுல்தேவ் காலமானார்..!

Q

’ஜெய் ஹோ’ படத்தில் நடித்து ரசிகர்களில் மத்தியில் பிரபலமான நடிகர் முகுல் தேவ் (54) நேற்று இரவு காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். முகுல் தேவை மரணமடைந்த செய்தியை அவர் உடன் 'சன் ஆஃப் சர்தார்' படத்தில் நடித்த நடிகர் விந்து தாரா சிங் உறுதிப்படுத்தி உள்ளார்.

நடிகர் விந்து தாரா தனது எக்ஸ் தளத்தில் நடிகர் முகல் தேவ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "என் சகோதரர் முகுல் தேவ் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன். 'சன் ஆஃப் சர்தார் 2' படம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைக்கும்" என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் முகுல் தேவ் தனது பெற்றோரின் மறைவுக்கு பிறகு தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார். அவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய சகோதாரர் மற்றும் அவரை நன்கு தெரிந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் நடிகர் விந்து தாரா சிங் தெரிவித்துள்ளார்.

யார் இந்த முகுல் தேவ்?

புதுடெல்லியில் பஞ்சாபி குடும்பம் ஒன்றில் பிறந்த முகுல் தேவ், ஜலந்தருக்கு அருகிலுள்ள ஒரு கிராமமே அவரது பூர்வீகம் ஆகும். இவர், நடிகர் ராகுல் தேவின் தம்பியும் ஆவார். முகுல் தேவ் 8ஆம் வகுப்பு படித்தபோது ஒரு டிவி நடன நிகழ்ச்சியில் மைக்கேல் ஜாக்சனைப்போல ஆடி பரிசு பெற்றார். அவர், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உரான் அகாடமியில் படித்து, பயிற்சி பெற்ற விமானியாகவும் இருந்தார். 1996ஆம் ஆண்டு ’மும்கின்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் விஜய் பாண்டே என்ற வேடத்தில் முகுல் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், அவர் ’ஏக் சே பத் கர் ஏக்’ என்ற பாலிவுட் கவுண்டவுன் நகைச்சுவை நிகழ்ச்சியில் தோன்றினார். தொடர்ந்து, ’ஃபியர் ஃபேக்டர்’ என்ற இந்தியாவின் முதல் சீசனையும் தொகுத்து வழங்கினார். அவர், ’தஸ்தக்’ என்ற படத்தில் ஏசிபி ரோஹித் மல்ஹோத்ராவாக நடித்தார். இந்தப் படத்தில் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் அறிமுகமானார். முகுல் தேவ் கடைசியாக ’அந்த் தி எண்ட்’ என்ற இந்தி படத்தில் நடித்தார்.

Trending News

Latest News

You May Like