1. Home
  2. தமிழ்நாடு

பழம்பெரும் நடிகர் டி. பி. மாதவன் காலமானார்..!

Q

1975-ம் ஆண்டு வெளிவந்த ராகம் எனும் மலையாளப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார் டி. பி. மாதவன்.

ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த இவர் பின்னர் குணச்சித்திர வேடங்களில் கொடிகட்டி பறந்தார்.

மலையாள திரையுலகின் நடிகர் சங்கம் அமைப்பான AMMA-வின் முதல் பொதுச் செயலாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அந்த பதவியின் மூலம் மலையாள நடிகர்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை அவர் செய்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.

டி. பி. மாதவன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Trending News

Latest News

You May Like