சுக்கிர பெயர்ச்சி 2025 : ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிகள்..!
2025- ஜனவர முதல் சுக்கிரன் குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் இந்த பெயர்ச்சியானது 28 ஜனவரி 2025 அன்று நிகழவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நடக்கும் முதல் பெயர்ச்சியாக சுக்கிர பெயர்ச்சி பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு மாத்திரம் நிதிநிலையில் பாரிய மாற்றம் ஏற்படவுள்ளது என ஜோதிடம் கூறுகின்றது.
2025 ஆம் ஆண்டில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், 2025-ல் நிகழும் சுக்கிர பெயர்ச்சியின் போது 11 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுக்கிரனின் ஆசியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். குறிப்பாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். காதலித்து வந்தால் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் உறவு வலுபெறும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உறவுகள் நன்கு வலுவடையும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். வீட்டிற்கு ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள். பரம்பரை சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சுக்கிரனின் ஆசியால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தாயிடமிருந்தும் நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன மற்றும் அவரது முழு ஆதரவையும் பெறுவீர்கள்.