1. Home
  2. தமிழ்நாடு

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெங்கட் பிரபு வெளியிட்ட சப்ரைஸ் வீடியோ..!

1

விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் இன்று (ஜூன் 22) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை நடிகர் விஜய், மற்றும் மறைந்த பாடகர் பவதாரிணி இணைந்து பாடியுள்ளனர். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் பாடலின் புரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவில் பவதாரிணியின் குரலில் மனதை வருடும் மெலடி பாடலாக இப்பாடல் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. முன்னதாக, வெளியான முதல் சிங்கிளான ‘விசில் போடு’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக  வெங்கட் பிரபு ஒரு சப்ரைஸ்  வீடியோ வெளியிட்டுள்ளார். 


 

Trending News

Latest News

You May Like