கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் விமல் படம்..! விஷால் போல் சாதிப்பாரா ..?

விமல் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சார்'.
கல்வியை முன்னிலை படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்தது. இந்த படத்தின் மூலம் போஸ் வெங்கட் படிப்பின் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
தற்போது இவருடைய நடிப்பில் 'பரமசிவன் ஃபாத்திமா' என்கிற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் விமல் நடிப்பில் உருவாகி கடந்த 6 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட திரைப்படத்தை தூசு தட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது. காமெடி ஜார்னலில் காதல் கலாட்டாவாக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இயக்குநர் கே வி நந்தா இயக்கிய இந்தப் படத்தில், விமல் மற்றும் சூரி முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மேலும், ஸ்ரீதா ராவ், கேஜிஎஃப் ராம், தேவதர்ஷினி, நமோ நாராயணன், செந்தில் உள்ளிட்ட நடித்துள்ளனர். காதல் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்து ஹிட் கொடுத்த மதகஜராஜா படத்தை நம்பியே இந்தப் படமும் இப்போது வெளியாக இருக்கிறது. விமலுக்கு 'படவா' படம் ஹிட் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மதகஜராஜா வெற்றியால், கிடப்பில் போடப்பட்ட பல படங்களை மீண்டும் ரிலீஸ் செய்யும், முடிவில் தயாரிப்பாளர்கள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.