1. Home
  2. தமிழ்நாடு

வேலூர் தொகுதி : 2019 vs 2024 : மீண்டும் வேலூரில் கதிர் vs ஏ.சி.சண்முகத்திற்கு போட்டி..?

Q

இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு தனியாக தேர்தல் நடந்தது என்றால் அது வேலூர் தொகுதி தான்..தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் உற்றுநோக்கும் தொகுதியாகவும் இருந்தது. 
ஏனென்றால் ஏ.சி.சண்முகத்திற்கும், கதிர் ஆனந்திற்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. 

திமுக மக்களவை உறுப்பினரும் பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகன் தான் கதிர் ஆனந்த்.கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார். 
அதிமுகவில் இருந்த்து ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார்.  இறுதியில்  8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் கதிர் ஆனந்த்.

தமிழகத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்கிற கணக்கீட்டிற்கு எப்போதும் வேலூர் மக்களவைத் தொகுதி முன்னுதாரணமாக எடுத்துக் காட்டப்படும். வேலூரில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று நம்பப்பட்டு வருகிறது.  

இப்படியான நிலையில் 2024  நாடாளுமனற தேர்தல் இன்றும் ஓரிரு மாதங்களில் நடக்க உள்ள நிலையில் மீண்டும், திமுகவில் இருந்து கதிர்  ஆனந்த்யும் மற்றும் பாஜகவில் இருந்து ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.இதனால் தற்போதே வேலூர் தொகுதி பரபரப்பான தொகுதியாக மாறியுள்ளது  

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேட்பாளர் மனுவை திமுக தலைமையிடம்  கொடுத்து  ஆசி வாங்கி உள்ளார் கதிர் ஆனந்த . இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திமுகவில் பலரும் தங்களுக்கு விருப்பமான தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி. மீண்டும் தூத்துகுடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தார். அந்த வரிசையில் தற்போது கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார். தூத்துக்குடியில்  போட்டியிட ஒரே ஒரு மனு மட்டும் தான் கொடுக்கப்பட்டு உள்ளது.... ஆனால் வேலூரில் இருந்து 2 மனுக்கள் வந்துள்ளதாம்...ஒன்னு கதிர் ஆனந்த்.. இன்னொருத்தர் திமுக அவைத்தலைவர் முன்னாள் எம் பி யாக இருந்த மொஹம்மத் சாஹு என்பவர் மனு கொடுத்து இருக்காராம்.

1

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் கடந்த முறை மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை ஏ.சி.சண்முகம் இழந்திருக்கிறார் என்றதால் இந்த முறை விடவே கூடாது என பல வேலைகள் செய்ய ஆரம்பித்துவிட்டாராம் . 

அதே போல் திமுக கதிர் ஆனந்த் எம்.பி யாக இருந்த இந்த 5 வருடத்தில் என்ன என்ன நலதிட்டங்கள் கொண்டு வந்துள்ளார் என்பதை பட்டியலிட்டு வருகின்றனர் திமுக நிர்வாகிகள். தன்னுடைய 5 வருடம் எம்.பி கால. கட்டடத்தில் சத்துவாச்சாரி  சுரங்க பாதை கொண்டு வந்தது முதல் கேவி குப்பம் என்ற பகுதியில் நிறுவி உள்ள டோல் கேட்டை செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுத்தது வரை லிஸ்ட் போட்டு மக்களிடம் எடுத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்களாம்.

இன்னும் பாஜக  தரப்பில் கூட்டணிகள்  முடிவாகாத நிலையில், வேட்பாளர் பட்டியல் கூட வெளிவராத நிலையில் எப்படியும்  வேலூரில் வெற்றி பெற்றிட வேண்டும் என்பதில் மும்முரமாக களத்தில்  இறங்கி.  உள்ளதாம் திமுக.
 

Trending News

Latest News

You May Like