1. Home
  2. தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!

Q

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை, அடிவாரம் பூண்டியிலிருந்து, ஐந்தரை கி.மீ., மலையேறி சென்றால், சிவபெருமானை தரிசிக்கலாம். இம்மலைக் கோவிலுக்கு செல்ல, ஏழு மலைகளை கடந்து நடந்தே செல்ல வேண்டும். மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் விரும்புகிறார்கள். பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

அந்த வகையில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த 9-ம் தேதி வெள்ளிங்கிரி மலை சுயம்பு லிங்கத்தைசுயம்புலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக மலையேற்றம் மலேற்கொண்டார். தரிசனம் முடித்துவிட்டு நேற்று ஆறாவது மலைப்பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது,  கடும் குளிர் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கோயில் நிர்வாகத்தினர், வனத் துறையினர் இணைந்து அவரது உடலை கீழே இறக்கினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடடத்தி வருகின்றனர்

Trending News

Latest News

You May Like