ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் செல்ல அனுமதி..!

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டது.சனிக்கிழமையான விஜயதசமி கொண்டாடப்பட்டது.மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது. இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் கடந்த வியாழக்கிழமை சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
3 நாள் விடுமுறை முடிந்த நிலையில், மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக, சென்னைக்கு வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டன.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை இன்றுடன் முடிவதை ஒட்டி ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டன. இதனால், தற்போது வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருக்கின்றன.
முடிந்தது விடுமுறை...!! சென்னைக்கு திரும்பும் மக்கள்... போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்கள் செல்ல அனுமதி!#Maduranthakam #Aathur #AathurTollPlaza #Traffic #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/refD1f4q7J
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) October 13, 2024