கோவை மருதமலை மலைப்பாதையில் 2 நாட்கள் வாகனங்கள் செல்ல அனுமதி தடை..!

கோவிலில் நாளை (18.11.23) சூரச சம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு பெரும் திரளாக பக்தர்கள் கூட்டம் வரும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, நாளையும், நாளை மறுநாளும் மட்டும் மலைப்பாதையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இது குறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் நாள்களான நவம்பா் 18, 19 ஆகிய இரண்டு தினங்களுக்கு மலைக் கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லவும், மலைப் பாதையில் நடந்து செல்வதற்கும் பக்தா்களுக்கு அனுமதியில்லை.பக்தா்கள் மலைப் படிகள் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம். கோயிலின் பேருந்து, கோயிலின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் மலைக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.