1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் , காய்கறி விலை திடீரென கடும் உயர்வு !!

சென்னையில் , காய்கறி விலை திடீரென கடும் உயர்வு !!


திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைவாக உள்ள நிலையில் சென்னை நகரில் விற்கப்படும் சில்லரை வியாபாரத்தில் கடும் விலை உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

திருமழிசை தற்காலிக சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 25 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெங்காயம் 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் நகரின் சில்லரை வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி 45 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையும் வெங்காயம் ஒரு கிலோ 40 லிருந்து 50 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல மற்ற காய்கறிகளையும் கடும் விலை உயர்த்தி  சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் முத்துக்குமார் தெரிவிக்கையில் ;

திருமழிசை தற்காலிக சந்தையில் சிறு மொத்த வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்கிறார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்த காய்கறிகள் திருமழிசைக்கு வந்து அங்கிருந்து விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபாரிகள் சிறு மொத்த வியாபாரிகள் என அனைவரும் உள்ளனர் எனவே சில்லரை வியாபாரிகள் தங்களுக்கு தேவையான அளவிற்கான காய்கறிகளை சிறு மொத்த வியாபாரிகளிடமிருந்து வாங்கி சென்றனர்.

தற்போது திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் சிறு வியாபாரிகளுக்கு கடைகள் கொடுக்கப்படாததால் சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்குகின்றனர். .அவர்கள் அதிக அளவிலான காய்கறிகளை வாங்கி கூடுதல் விலைக்கு சில்லரை வியாபாரத்தில் விற்பதாக சில்லரை வியாபாரிகளுக்கும் நாள்தோறும் கிலோ கணக்கில் காய்கறிகள் வீணாவதாக என்று கூறுகிறார்

Newstm.in

Trending News

Latest News

You May Like