சீமான் மீதான புகாரை நடிகை விஜய லட்சுமி வாபஸ் பெற்றது குறித்து வீரலட்சுமி ரியாக்ஷன்..!

சீமான் தன்னை திருமணம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். மேலும் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை 2013 இல் திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் தான் 7 முறை கருத்தரித்ததாகவும் அதை சீமான் கட்டாயப்படுத்தி கலைத்துவிட்டார் என்றும் விஜயலட்சுமி குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர் .
இந்த சூழலில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்றுள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் சீமான் மீதான அனைத்து புகார்களையும் எழுத்துப்பூர்வமாக மனு கொடுத்து திரும்ப பெற்றார்.வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இதற்காக நான் பணமும் வாங்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல் துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை.தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து வீரலட்சுமி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீமானும் விஜயலட்சுமியும் சமாதானம் ஆனது மகிழ்ச்சி. இவர்கள் விவகாரத்தை கையில் எடுத்து சட்டரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் தீர்வு காண முயற்சித்தேன். விஜயலட்சுமி விவகாரம் இத்துடன் நிரந்தரமாக முடிவு வந்துவிட்டது. சீமான்- விஜயலட்சுமி சமாதானமானதால் வேண்டுதலை நிறைவேற்ற இன்று 1000 பேருக்கு அன்னதானம் வழங்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார் வீரலட்சுமி.