சித்த மருத்துவர் வீரபாபுவின் 10 ரூபாய் மருத்துவமனை… இன்று தொடக்கம்!

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய சித்த மருத்துவர் வீரபாபுவின் 10 ரூபாய் மருத்துமனை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி மருத்துமனை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சித்த மருத்துவம் மட்டுமல்லாமல் ஆங்கில மருத்துவமும் பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிகிச்சை அளிக்கப்படும் என்றும், கட்டணம் வெறும் 10 ரூபாய் எனவும் உழைப்பாளி மருத்துமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் வீரபாபு ரஜினி ரசிகர் என்பதால் உழைப்பாளி மருத்துவமனை என்று பெயரிட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே சாலிகிராமத்தில் 10 ரூபாய்க்கு உழைப்பாளி உணவகம் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உழைப்பாளி மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
newstm.in