வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு..!
3 தொகுதிகள் கேட்ட நிலையில் வி.சி.க.வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 2019 தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் வி.சி.க. போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டது.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் 6ஆவது முறையாக போட்டியிடுகிறார். அது போல் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 2ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
2 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.