1. Home
  2. தமிழ்நாடு

கோலாகலமாக நடந்து முடிந்த வெற்றி வசந்த் வைஷ்ணவி திருமணம்..!

Q

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்திருக்கிறார்.

 

அதிலும் கிடைத்த வேலை எல்லாம் செய்து வந்த வெற்றி வசந்த்திற்க்கு முதல் முறையாக சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாகத்தான் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலிலேயே இவருக்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் கிடைத்து விட்டது .

 

சிறகடிக்க ஆசை சீரியலில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கேரக்டராக வெற்றி வசந்த் நடித்து வருகிறார். அதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்களும் கிடைத்துவிட்டனர்‌ முத்து மற்றும் மீனா ஜோடிக்கு இணையத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பு வெற்றி வசந்த் தன்னுடைய காதல் செய்தியை அறிவித்திருந்தார். அவர் காதலித்து வந்தது விஜய் டிவி பிரபலமான நடிகை வைஷ்ணவி தான். இவர் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு முன் நடக்கும் சங்கீத், மெஹந்தி ஹல்டி போன்ற திருமண கொண்டாட்டங்களும் நடந்திருந்தது. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி இருந்தது. இந்நிலையில், இன்று நவம்பர் 28ஆம் தேதி, நடிகர் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் திருமணம் சிறப்பாக சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமணத்தில் இவர்களின் குடும்பத்தினர் மற்றும் சீரியல் பிரபலங்களும் பங்கேற்றுள்ளார்கள். தற்போது இந்த ஜோடிக்கு பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகிறார்கள்.

Trending News

Latest News

You May Like