இன்று சின்னத்திரை தம்பதி வெற்றி வசந்த் - வைஷ்ணவி திருமணம்..!
யாருக்கு எப்போது வாழ்க்கை மாறும் என்று தெரியாது. தன்னுடைய உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு சான்றாகத்தான் தற்போது சின்னத்திரை ரசிகர்களின் மனதை வெற்றி வசந்த் பிடித்திருக்கிறார்.இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் பல வேலைகளை செய்து இருக்கிறார். வாட்ச்மேனாக மட்டுமல்லாமல் திரைப்படங்கள் எடுபிடி வேலை வரை எல்லா வேலைகளையும் செய்து தான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதிலும் முதல் சீரியலிலே இவருக்கு தமிழ் ரசிகர்கள் இவ்வளவு வரவேற்பு கொடுப்பார்கள் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். நடுத்தர மக்களின் கேரக்டரை அப்படியே பிரதிபலிக்கும் கேரக்டராக வெற்றி வசந்த் 'முத்து' கேரக்டரில் நடித்து வருகிறார். இதனாலேயே இவருக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதேபோலத்தான் அவருடைய வருங்கால மனைவி வைஷ்ணவியும் இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் துணை கேரக்டரில் நடித்த வைஷ்ணவி பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் இவர் நடிக்கும்போது அதிகமான விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி இவர் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த மாதத்தில் தான் வைஷ்ணவி சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்தத்தை காதலிக்கும் தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த வாரமே இந்த ஜோடியின் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. சின்னத்திரையில் ஒன்றாக நடித்து பலர் காதலர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த் ஜோடியும் இணைந்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று நவம்பர் 28ஆம் தேதி இந்த சின்னத்திரை ஜோடிக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான சங்கீத் பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அப்போது மணப்பெண் வைஷ்ணவி மற்றும் மாப்பிள்ளை வெற்றி வசந்த் இருவரும் க்யூட்டாக டான்ஸ் ஆடிய வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பங்க்ஷனில் பொன்னி சீரியல் பிரபலங்கள் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.