இணையத்தில் வைரலாகும் வரலட்சுமி சரத்குமார் திருமணம் புகைப்படங்கள்..!
14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கரம்பிடிக்க உள்ளார் வரலட்சுமி சரத்குமார்.இருவீட்டார் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் சென்னையில் கடந்த வாரம் கலைகட்டி இருந்தது. வரலட்சுமி - நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தம் இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடிகை வரலட்சுமியின் திருமண கொண்டாட்டம் ஆடம்பரமாக 5 நாட்கள் நடைபெற்றது. மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என பல நாட்கள் நடந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் லீலா பேலஸில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் திருமணம் தாய்லாந்தி கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Two Hearts, One Love Varalaxmi And Nicholas Begin Their Forever Together💓✨#varalakshmi #nicholaisachdev #nicholai #nicholaisachdeva #beziquestreams #radhikasarathkumar #radhika #sarathkumar #varu #tamilactress #kollywood #kollywoodcinema #kollywoodmovie #tamilmovie pic.twitter.com/SpNl5qm5Bb
— Bezique Streams (@BeziqueStreams) July 11, 2024