நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் - நிகோலை திருமண புகைப்படங்கள் வெளியானது!

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் என்பவரை காதலித்து வந்தார் வரலக்ஷ்மி. இருவரின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் சிம்பிளாக நடந்து முடிந்தது.
வரலக்ஷ்மி நிக்கோலாய் இருவரின் திருமணத்திற்கு தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் என முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்த நடிகை வரலட்சுமியின் போட்டோஸ் இணையத்தில் வைரலானது.திருமணத்திற்கு ஓரிரு நாட்களே இருந்த நிலையில், வரலக்ஷ்மியின் திருமண கொண்டாட்டம் கலைகட்டத் தொடங்கியது. முன்தினம் மெஹந்தி நிகழ்வு நடைபெற்றது.
மஞ்சள் உடையில் வரலக்ஷ்மி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வரலக்ஷ்மியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நேரில் வந்து ஜோடிக்கு வாழ்த்து கூறி இருக்கின்றனர். புகைப்படங்கள் இதோ.