வரலட்சுமியின் பிசினஸ் பயங்கர ஹிட்... என்ன விற்கிறார் தெரியுமா?

சரத்குமாரின் மகள் வரலட்சுமி திறமை வாய்ந்த நடிகை என்றாலும் கூட பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அவர் முக்கியமான சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பொதுமுடக்கம் என்பதால் வரலட்சுமி வீட்டிலேயே உள்ளார். லாக்டவுன் காலத்தில் பிரபலங்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஆக்டிவாக இருக்கும் சூழலில் வரலட்சுமி பிசினஸில் இறங்கியுள்ளார். LIFE OF PIE என்ற பெயரில் ஒரு பேக்கிங் கம்பெனி ஆரம்பித்துள்ளார். வெளிநாட்டில் சாப்பிட்ட ஹொக்கைடோ சீஸ் டார்ட்ஸ் தான் இன்ஸ்பிரேஷனாம். அதனை நம் ஊர் பொருட்கள், தமிழ்நாட்டுக்கு ஏற்ற ஸ்டைலில் செய்துள்ளார் வரலக்ஷ்மி. வெறும் பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட பேக்கரியில் தற்போது வியாபாரம் சூடு பிடித்துள்ளது. வாட்ஸ் ஆப்-இல் ஆர்டர் செய்தால் உணவு வீடு தேடிவரும். ஆனால் விலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது.
newstm.in