1. Home
  2. தமிழ்நாடு

இன்று வரலக்ஷ்மி விரதம் ..! பூஜை செய்வது எப்படி,பூஜை செய்ய நல்ல நேரம்..!

1

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கொண்டாடப்படுகிறது வரலட்சுமி விரதம்.

சுமங்கலி பெண்கள், மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமிக்கு செய்யும் சிறப்பான வழிபாட்டு பூஜை இந்த வரலட்சுமி விரதம் ஆகும்.

பொதுவாக ஆடி மாதம் 3 அல்லது 4வது வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் மேற்கொள்வதால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர்.

வரலட்சுமி விரதம் கடைப்பிடிகும் முறை:
வீடு அல்லது அலுவலகத்தில் தென் கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்ப வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைத்து வணங்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து பின் அதை ஒரு பலகை மீது வைக்கவும்..

பின் சிலை முன் ஒரு வாழையிலை போட்டு, ஒரு படி பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்கள் வைத்து, சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.

மாவிலையுடன் தேங்காயை, அரிசின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து சுவாமியை பூஜை செய்ய வேண்டும்.

பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம்.

வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும். நெய்வேத்தியமாக கொழுகட்டை படைக்கலாம்.சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலையை மறுநாள் நீர் நிலைகளில் கரைத்துவிட வேண்டும்.

வரலட்சுமி விரதத்தின் பலன்கள்:

வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான இந்து சமயத்தை பின்பற்றும் சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள விரும்புவர். அப்படிப்பட்ட மிக முக்கிய விரத நாளா வரலட்சுமி விரதம் இன்று வெள்ளிக் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளிக் கிழமை காலை நல்ல நேரம் 9 மணி முதல் 10.30 மணிக்குள் சாமி கும்பிடலாம். மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது. அந்த நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யலாம்.
 

Trending News

Latest News

You May Like