இன்று வரலட்சுமி நோன்பு : இன்று இந்த 3 பொருட்களை தாயாருக்கு படைத்தால் வீட்டில் செல்வ வளம் சேரும்..!
வரலட்சுமி நோன்பு அன்று நாம் வாங்க வேண்டிய பொருள்
இந்த நாளில் நெல்லிக்கனியை வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நெல்லிக்கனி என்றால் சாதாரணமாக கிடைப்பது போல் அல்லாது நல்ல தரமான பெரிய நெல்லிக்கனிகளாக வாங்கி பூஜையறையில் தாயார் படத்திற்கு முன்பாக வைத்து வணங்க வேண்டும். அதுவும் வரலட்சுமி நோன்பு நாளான வெள்ளிக்கிழமை அன்றே தான் இதை வாங்கி படைக்க வேண்டும்.
இந்த நெல்லிக்கனியானது குபேரருக்கும் உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. குபேரர் வறுமையில் துன்பப்படும் போது நெல்லி மரம் வளர்த்து வழிபடுமாறு அவருக்கு உபதேசிக்கப்பட்டதாக சில புராண கதைகள் உண்டு. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த நெல்லி மரம் மகாலட்சுமி தாயார், குபேரர் இருவருக்குமே உகந்தது. ஆகையால் இன்றைய தினத்தில் நெல்லிக்கனியை வாங்கி வைப்பது அதிக சிறப்பினையும் பலனையும் தரும்.
இத்துடன் இன்றைய நாளில் கல் உப்பு வாங்க வேண்டும். அது அனைவருக்கும் தெரிந்தது தான். வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் கல் உப்பு வாங்குவது வீட்டில் செல்வ கடகத்தை அதிகரிக்கும். இந்த நாளில் மறக்காமல் அதை வாங்கி வைத்து விடுங்கள். இவை அனைத்தும் விட மஞ்சள் நிற துண்டு வாங்க வேண்டும். இது துண்டாக இல்லாமல் ரவிக்கை துணியாக இருந்தால் இன்னுமே சிறப்பு.
இந்த ரவிக்கை துணியோடு குண்டு மஞ்சள் கிழங்கினை வாங்கி வைத்து மகாலட்சுமி தாயாருக்கும் முன் வைத்து படைத்து வணங்கிய பிறகு அதை நீங்கள் உங்கள் வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு அல்லது உங்களுக்கு தெரிந்த சுமங்கலி பெண்களுக்கு கொடுக்கும் பொழுது அன்றைய தினத்தில் கலசம் வைத்து வழிபட்டதற்கான முழு பலனையும் இந்த ஒரு வழிபாட்டிலே பெற முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த வரலட்சுமி நோன்பு அன்று கலசம் வைத்து வழிபடுபவர்கள் தங்கள் முறைப்படி வழிப்பட்டு அத்துடன் இந்த மூன்று பொருட்களையும் வைத்து வணங்கலாம். இந்த வழிபாடு தங்களுக்கு கிடையாது என நினைப்பவர்கள் இந்த பொருட்களை மட்டுமாவது அன்றைய தினத்தில் வாங்க வைத்து தாயாரை வழிபட்டு குபேர சம்பத்துடன் நலமாக வாழலாம்.
.png)