1. Home
  2. தமிழ்நாடு

4 வது திருமணம் செய்யப்போகும் வனிதா விஜயகுமார்..! மாப்பிள்ளை யாரு தெரியுமா ?

1

நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார். அதன்பின்னர் சில படங்களில் நடித்தார். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து செட்டில் ஆனார்.ஆகாஷுக்கு பிறந்தவர்கள் தான் விஜய ஹரி, ஜோவிகா.

ஆகாஷை விவாகரத்து செய்த அவர் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்கு பிறந்தவர் தான் ஜெயனிதா. எனினும் மகன் விஜய ஹரியை தந்தையுடன் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அவர் வனிதாவை விட்டு விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார். அதேபோல் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஜோவிகா தற்போது வனிதாவுடன் வசித்து வருகிறார்.

இதனையடுத்து தனது 3-வது திருமணம் மூலம் வனிதா மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் ஏற்பட்ட மோதலால் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.

இதனிடையே யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கிய வனிதா அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் வனிதா அவ்வபோது தனது போட்டோக்கள் மற்றும் தனது மகளுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

வனிதா விஜயகுமாரிடம் அடுத்த திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்த வனிதா எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் வனிதா 4-வது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தன் நீண்ட கால நண்பரான நடன இயக்குநர் ராபர்ட்டை வருகிற அக். 5 ஆம் தேதி திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். இது, வனிதாவுக்கு 4-வது திருமணமாகும். 


 

Trending News

Latest News

You May Like