1. Home
  2. தமிழ்நாடு

வனிதா விஜயகுமார் 4 வது திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாத்திங்களா..?

1

நடிகர் விஜயகுமார், தமிழ் சினிமாவில் மூத்த நடிகர். பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அவர் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர் அதில் மகன்தான் நடிகர் அருண் விஜய்.

இதன் பிறகு, சினிமாவில் நடிக்க வந்த விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள். அதில் மூத்தவர்தான் நடிகை வனிதா விஜயகுமார்.

துவக்கத்தில் சில படங்களில் வனிதா விஜயகுமார் நடித்தார். அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு அவராக முடிவெடுத்து, முதல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலேயே முதல் கணவரை பிரிந்தார். பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த கணவரையும் பிரிந்தார். பிறகு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அந்த கணவரையும் பிரிந்தார்.

நடிகை வனிதா விஜயகுமார் ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்தவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்நிலையில் நான்காவதாக ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார் என்ற தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சமீபத்தில் அவருடைய நான்காவது திருமணம் குறித்த கேள்விக்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று பதில் கொடுத்து இருந்தார் வனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வனிதா விஜயகுமார் தனது நீண்ட கால நண்பரான டான்ஸ்  மாஸ்டர் ராபர்ட்டை 4வதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.  வருகிற அக்.5ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. இதனிடையே ராபர்ட் மாஸ்டரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  


 

Trending News

Latest News

You May Like