திடீரென காவி நிறத்திற்கு மாறிய வந்தே பாரத் ரயில்..!

நாடு முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 46 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
வெள்ளை நிறத்தால் ரயில் பெட்டிகள் அதிக அழுக்காவதாகவும், அதனை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றம் செய்ய ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்ட வந்தே பாரத் ரயிலின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக அரசு வந்தே பாரத் ரயிலை காவி நிறத்திற்கு மாற்றிவிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.