வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி..!
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரயில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட விழுந்தது. இதனை ரயிலில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வடக்கு ரயில்வேயின் அதிகாரபூர்வ எக்ஸ் தள கணக்கை டேக் செய்து புகார் அளித்து தங்களது கோபத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தினர்.
நாட்டின் சிறந்த பயணிகள் ரயில்களில் ஒன்றாக கூறப்படும் வந்தே பார்த் ரயிலின் தரத்தை பாருங்கள் என்றும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வந்தே பார்த் ரயில் சேவை மோசமாக இருப்பதாகவும் பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இந்த நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளது.
भारत की टॉप मोस्ट पैसेंजर ट्रेनों में एक वंदेभारत देखिए. छत से पानी टपक रहा है. दिल्ली-वाराणसी ट्रैक है और ट्रेन नंबर है 22416. pic.twitter.com/OoPiKbkQOr
— Sachin Gupta (@SachinGuptaUP) July 2, 2024