வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் மீது கல்வீச்சு..!

நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்தை கடந்து வேலாயுதபுரம் அருகே மாலை 4:05 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கல் வீசினர்.
இதில், சி - 16 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது. சிறிது தொலைவு சென்ற பிறகே கண்ணாடி சேதமடைந்த விபரம் ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் தெரிந்தது.
ரயில்வே பாதுகாப்பு போலீசார், கல் வீசி கண்ணாடியை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.