1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் இயக்கம்..!

1

இன்று (புதன்கிழமை) முதல் ஜூலை  29-ம் தேதி வரை மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து இன்று முதல் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு காலை 7 மணிக்கு சென்று பின்னர் 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக சென்று, பெங்களூருவுக்கு மதியம் ஒரு மணிக்கு சென்றடையும். 

இதே போல் மறுமார்க்கமாக, மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரயில், திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வந்து 7.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதன் பின்னர் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வந்து சேரும். 

Trending News

Latest News

You May Like