வண்டலூர் பூங்காவில் ஆன்லைன் கட்டண முறை அமல்..!
வண்டலூர் பூங்காவில் ஆன்லைன் கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள், அங்குள்ள கியூ– ஆர் கோடை ஸ்கேன் செய்து பெரியவர்கள் எத்தனை பேர் சிறியவர்கள் எத்தனை பேர் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், அதற்கான கட்டணத்தை ஜிபே, பேடிஎம் மூலம் செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடன், டிக்கெட், பார்வையாளர்களின் வாட்ஸ் அப்பில் வந்துவிடும். அந்த டிக்கெட்டை நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்துவிட்டு உள்ளே செல்லலாம். இந்த முறையால் வாட்ஸ் அப், ஜிபே போன்ற வசதி இல்லாதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.