அண்ணாமலை பேச்சால் அதிர்ந்துப்போன வானதி..! பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு..!

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், சவுமியா அன்புமணி, வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன் வைத்தனர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்துள்ளார். அவர் 24 வயதில் சீட் கேட்கவில்லை, 30 வயதில் சீட் கேட்கவில்லை, 35 வயதில் சீட் கேட்கவில்லை, 50 வயதிலும் சீட் கேட்கவில்லை. சவுமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணமாகி, குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார். இதற்காக, கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் என கூறினார்.
சவுமியா அன்புமணி அவரது பேத்திக்கு திருமணம் முடிந்த பின்பு தான் அரசியலுக்கு வந்து இருப்பதாக அண்ணாமலை கூறிய பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சற்றே குழப்பம் அடைந்தனர்.
பாமக தலைவர் அன்புமணி- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் நடந்தது. அவரது மகளுக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகளே ஆகியுள்ளது. ஆனால் அண்ணாமலை, சவுமியாவின் பேத்திக்கு திருமணம் நடந்துள்ளது என கூறியது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
#JUSTIN வாரிசு அரசியலில் சவுமியா அன்புமணி வரமாட்டார் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி #Annamalai #SowmiyaAnbumani #PMK #BJP #ParliamentElection2024 #news18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/99b68pXzhz
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 26, 2024