1. Home
  2. தமிழ்நாடு

ஒரு மாநில முதலமைச்சர் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் கவனம் செலுத்துவதில்லை - வானதி சீனிவாசன்..!

1

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, யோகாசனம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வானதி சீனிவாசன், இதுபற்றி கூறியதாவது:

கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணம் தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மனதையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக அரசு இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தை தடுக்க முடியல, கள்ளச்சாராய மரணத்தை தடுக்க முடியல, கள்ளச்சாராயத்தை விற்கும் திமுக காரர்களை கட்டுப்படுத்த முடியல. ஆனால், யோகா செய்யும் நிகழ்ச்சிகளை இவர்கள் தடை செய்யப் போறாங்களாம். எவ்வளவு வேடிக்கையாக இருக்குனு பாருங்க.

ஒரு மாநில முதலமைச்சர் எதில் கவனம் செலுத்த வேண்டுமோ, அதில் கவனம் செலுத்துவதில்லை. உங்களுடைய தவறுகளை மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் சாதாரணமாக பூங்காக்களில் நடக்கும் யோகா நிகழ்ச்சிகளை கூட தடை பண்றீங்க. இதுதான் இன்றைக்கு திமுக அரசு இருக்கக் கூடிய நிலைமை. கள்ளச்சாராய மரணத்தை எதிர்த்து நாளை பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போகிறோம்.

இப்படி கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாட்டில் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு மரக்காணத்தில் இதுபோன்ற கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்த ஓராண்டுக்குள் மீண்டும் அதே சம்பவம் நடக்கிறது என்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு தனது துறையை கட்டுப்படுத்த தெரியவில்லை என்றுதான் அர்த்தம். ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன்தான், கள்ளச்சாராய வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் வேடிக்கை பார்க்கக் கூடியவராகதான் நமது முதல்வர் இருக்கிறார் என வானதி சீனிவாசன் கூறினார்.

Trending News

Latest News

You May Like