யானை தாக்கி பலியான குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் – வானதி சீனிவாசன்..!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
கோவை, வடவள்ளி அடுத்த மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் நேற்று புகுந்த ஒற்றைக் காட்டு யானை கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து கல்லூரியில் பணியாற்றி வந்த காவலாளி உட்பட இரண்டு பேர் யானையை விரட்ட முயன்று உள்ளனர். இதில் யானை விரட்டியதில் இரண்டு பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அதில் சண்முகம் என்ற காவலாளி யானை தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
சுரேஷ் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். யானை தாக்கி காவலாளி உயிரிழந்த அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் வனத் துறையினர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை, வடவள்ளி அடுத்த மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் நேற்று புகுந்த ஒற்றைக் காட்டு யானை கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து கல்லூரியில் பணியாற்றி வந்த காவலாளி உட்பட இரண்டு பேர் யானையை விரட்ட முயன்று உள்ளனர். இதில் யானை விரட்டியதில் இரண்டு பேரும் கீழே விழுந்து படுகாயம்… pic.twitter.com/cV5zubzpT7
— Vanathi Srinivasan ( Modi Ka Parivar) (@VanathiBJP) May 24, 2024